மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Tuesday, 27 October 2015

1.
 பருத்தி போட்டதை விட
நெல் போட்டதை விட
மரவள்ளி
போட்டதை விட
மக்காச்சோளம்
போட்டதை விட
லாபகரமாக உள்ளது
ஃ பிளாட் போட்டது


2.

பக்கத்துவீட்டு
எஸ்.மாலதி
எங்கப்பா
கொன்னுருவாருன்னு
பயமா இருக்குன்னு சொல்லி
பிரிந்துவிடுவோமென்று
அழுத போதைவிட
அதிகம் வலிக்கிறது
அஞ்சு வருஷம் கழிச்சி
தன் பிஞ்சு மகளிடம்
அங்கிள பாருன்னு
அறிமுகப்படுத்திய போது

3.
நவீன நிரோத் யுகம் 

நெடிதுயர்ந்த
பின்நவீன
வடிவமைப்பு
அடுக்ககமொன்றில்
தர்க்கத்திற்கும்
அதர்க்கத்திற்கும்
இடைப்பட்டு நடந்தது

புணர்ச்சியொன்று
முதலில் 
தவமாய்த் தவமிருந்து
அரிதாய் அமைந்த
சந்தர்ப்பமொன்றில்
தன் விருப்பத்திற்காக
பிறன்மனையுடன்
கருத்தரித்தலற்ற
புணர்தல் நடந்தது
அடுத்து 
பட்டப் பகலில்
பத்து வருட தாம்பத்திய
சலிப்பிருந்தும்
தன்மனை
விருப்பத்திற்காக
மீண்டுமொரு
கருத்தரித்தலற்ற
புணர்தல் நடந்தது
நட்டநடுநிசியில்
ஒருநாளின்
வெவ்வேறு
நேரங்களில் நிகழ்ந்த
புணர்தல்களின்
அண்டம் முட்டா
ஆணுறை விந்தணுக்கள்
மறுநாள் காலை
பயணிக்கின்றன
மாநகராட்சி வண்டியில்
மக்காத குப்பைகளின்
நட்டநடுவினில்
 தங்கள் மரணத்தை
தாங்களே
அறிவித்துக்கொண்டு

4.
அம்மாவின்
இடுப்பமர்ந்து
ஏற்கனவே
எத்தனையோ
பேர்கள் கேட்ட
உலகின் அரத பழசான
கேள்விகளுடன்
நிலாபார்த்தபோது
கிளர்ந்தெழுந்த
மகிழ்ச்சிகள்
பொங்கிப் பெருகவில்லை
 பின்னாளில்
தன் இடதுகாலை
நிலாவில் வைத்த
நீலும் ஆம்ஸ்ட்ராங்குக்கு 


 

 

Tuesday, 13 October 2015

 பருத்தி
போட்டதைவிட
மக்காச்சோளம்
போட்டதைவிட
மரவள்ளி
 போட்டதைவிட
லாபகரமாக உள்ளது
ஃ பிளாட்  போட்டது