மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Saturday, 27 October 2012

மலடென்று 
யாருமில்லை உலகில் 
அவரவர் சாயலில் 
 எல்லோருக்கும் பிறக்கும் 
நிழல்கள் ....






Monday, 15 October 2012

அம்மாவைப்   
பார்க்கும் போது
ஓடி வரும் 
பச்சிளம் குழந்தைகள்
தடுக்கி விழும்போது
திடுக்கிடுகிறார்
கடவுள்   
 
       

             

Sunday, 14 October 2012

  ஏன் பாரதி ?  
  ஏன் பாரதி ? 
  ஏன் பாரதி ?                                                                                         
   பாரதி தன் மனைவி செல்லம்மாளைச்   சந்தேகப்பட்டதாகத் தன் மகள்
 தங்கம்மாள்பாரதியால் -எந்தையும் தாயும் -என்ற நூலில் குறிப்பிடப்
 பட்டுள்ளது .பாரதி வீட்டுக்கு வந்தவுடன்  வீட்டினுள் கிடக்கும் மண்மீது
ஏதேனும் புதிய காலடித்தடங்கள் இருக்கிறதா ?என்று தேடுவாராம் .
 அப்படி ஒரு புதிய காலடித்தடம்   கிடைத்தால் யாரோ புதியவர் வந்ததாக
 அர்த்தமாம்...... ....








பறவை பாடங்கள் 
..........................................
















 காதலுக்கு
மணிப் புறாக்கள் 

கவனத்துக்குக்
கழுகுகள் 

ஒற்றுமைக்குக் 
காகங்கள் 

சுறுசுறுப்புக்குச் 
சிட்டுகள் 

 இசைக்குக் 
குயில்கள் 

அறிவுக்குக் 
கிளிகள் 

அன்புக்கு 
அன்றில்கள் 

மனங்கொத்த 
மரங்கொத்திகள்   

அப்பப்பா 
இவையெல்லாம் 
பறவைகளல்ல 
மனிதர்க்கு 
பாடங்கள் ..