மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Friday, 7 October 2016

மாதிரி வினாத்தாள் (முதல் பருவம்)

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்
அறிவியல் மற்றும் கலையியல் புலம், வடபழனி.
மாதிரித்தேர்வு – முதற்பருவம்,

                   
                     குறியீட்டு எண்: ULT15101
காலம்: 3 மணி                                                                          தமிழ் - 1
 மதிப்பெண்கள்: 100                                                                 

பகுதி –அ – 
எவையேனும் பத்திற்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க:                                    10 x 3 =30
11.    “மருந்து தின்ற நகக் கணுக்கள் ரணமாகித் தகிக்க “- இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
22.    பாரதிதாசன் குறிப்பிடும் “மாம்பிஞ்சு உள்ளம்” படைத்தோர் யாவர்?
33.    ”அரியினொடு அரியினம் அடர்ப்பபோல்“ -இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
44.    ”பொன் செய் கொல்லன் - தன் சொல் கேட்ட ” -இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
55.    “கண்ணிலாக் குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” – உவமையை விளக்குக?
66.    உலா குறித்து எழுதுக?
77.    சிறுகதை உலகில் பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிடுக?
88.    நாவலின் வகைகளை எழுதுக?
99.    புதுக்கவிதை வளர்ச்சியில் வானம்பாடிக் காலப் புதுக்கவிஞர்களை எழுதுக?
110.  உரைநடை ஆசிரியர்களின் பெயர்களை எழுதுக?
111.  நம்பிக்கை எனும் வழிகாட்டி குறித்து ஆசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
112.   தீய எண்ணங்களைப் போக்க எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?

பகுதி – ஆ-
 எவையேனும் ஐந்திற்கு  இரு பக்க அளவில் விடையளிக்க:                 5 x 5 =25
113.  காகிதப் பூக்கள் என்னும்  தலைப்பில் நா. காமராசன் கூறும் கருத்துகளை எழுதுக.
114.  ஒரு பிஞ்சின் வேண்டுகோளாக ஆசிரியர் து. நரசிம்மன் கூறும் கருத்துகளை எழுதுக.
115.  திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெற்றுள்ள மலை வளம் குறித்து எழுதுக.
116.  சிறுகதையின் வளர்ச்சி நிலைகளை எடுத்துரைக்க?
117.  தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடை வளர்ச்சிக் குறித்து விளக்கி உரைக்க?
118.  லட்சிய தீபம் என்னும்  தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?
119.  சரித்திரத்தை மாற்றிய எண்ணங்கள் குறித்து எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?

  பகுதி
எவையேனும் மூன்றிற்கு மூன்று பக்க அளவில் விடையளிக்க:                           3 x15 =45
220.  கிளிக்கூண்டு என்னும் கவிதையில் ஆசிரியர் கவிதையின் அழகை எவ்வாறு விவரிக்கிறார்?
221.  கலிங்கத்துப்பரணியின் போர்க்களக் காட்சியை விவரி?
222.  கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்ததை நாடகப் பாங்கில் எழுதுக?
223.  சிற்றிலக்கியம்  தோற்றமும் வளர்ச்சியும் குறித்து எழுதுக?
224.  எண்ணங்கள் என்னும் தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறும் கருத்துக்களைத் தொகுத்தெழுதுக?

Tuesday, 27 October 2015

1.
 பருத்தி போட்டதை விட
நெல் போட்டதை விட
மரவள்ளி
போட்டதை விட
மக்காச்சோளம்
போட்டதை விட
லாபகரமாக உள்ளது
ஃ பிளாட் போட்டது


2.

பக்கத்துவீட்டு
எஸ்.மாலதி
எங்கப்பா
கொன்னுருவாருன்னு
பயமா இருக்குன்னு சொல்லி
பிரிந்துவிடுவோமென்று
அழுத போதைவிட
அதிகம் வலிக்கிறது
அஞ்சு வருஷம் கழிச்சி
தன் பிஞ்சு மகளிடம்
அங்கிள பாருன்னு
அறிமுகப்படுத்திய போது

3.
நவீன நிரோத் யுகம் 

நெடிதுயர்ந்த
பின்நவீன
வடிவமைப்பு
அடுக்ககமொன்றில்
தர்க்கத்திற்கும்
அதர்க்கத்திற்கும்
இடைப்பட்டு நடந்தது

புணர்ச்சியொன்று
முதலில் 
தவமாய்த் தவமிருந்து
அரிதாய் அமைந்த
சந்தர்ப்பமொன்றில்
தன் விருப்பத்திற்காக
பிறன்மனையுடன்
கருத்தரித்தலற்ற
புணர்தல் நடந்தது
அடுத்து 
பட்டப் பகலில்
பத்து வருட தாம்பத்திய
சலிப்பிருந்தும்
தன்மனை
விருப்பத்திற்காக
மீண்டுமொரு
கருத்தரித்தலற்ற
புணர்தல் நடந்தது
நட்டநடுநிசியில்
ஒருநாளின்
வெவ்வேறு
நேரங்களில் நிகழ்ந்த
புணர்தல்களின்
அண்டம் முட்டா
ஆணுறை விந்தணுக்கள்
மறுநாள் காலை
பயணிக்கின்றன
மாநகராட்சி வண்டியில்
மக்காத குப்பைகளின்
நட்டநடுவினில்
 தங்கள் மரணத்தை
தாங்களே
அறிவித்துக்கொண்டு

4.
அம்மாவின்
இடுப்பமர்ந்து
ஏற்கனவே
எத்தனையோ
பேர்கள் கேட்ட
உலகின் அரத பழசான
கேள்விகளுடன்
நிலாபார்த்தபோது
கிளர்ந்தெழுந்த
மகிழ்ச்சிகள்
பொங்கிப் பெருகவில்லை
 பின்னாளில்
தன் இடதுகாலை
நிலாவில் வைத்த
நீலும் ஆம்ஸ்ட்ராங்குக்கு 


 

 

Tuesday, 13 October 2015

 பருத்தி
போட்டதைவிட
மக்காச்சோளம்
போட்டதைவிட
மரவள்ளி
 போட்டதைவிட
லாபகரமாக உள்ளது
ஃ பிளாட்  போட்டது

Friday, 14 June 2013



பென்சிலோடு
அறிவையும்
கூர்தீட்டியே
வைத்திருக்கிறது
மாணவம்
அதை எப்போதும்
மழுங்கடிக்கவே 
காத்திருக்கிறது
நாம் கொடுக்கிற
வீட்டுப்பாடம்


Monday, 11 February 2013


கிட்டப்பார்வை
தூரப்பார்வை
இரண்டுமில்லை  நீ பார்ப்பது
ஓரப்பார்வை

 

Wednesday, 12 December 2012

கருப்பு வேட்டி கட்டி
குளிருல குளிச்சி
செருப்பு போடாம
பீடி சிகரெட் புடிக்காம
தண்ணி வண்ணி குடிக்காம
கெட்ட வார்த்தை பேசாம
பல்ல கடிச்சிக்கிட்டு இருந்து
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தன்னு சொல்லி
கந்துவட்டிக்குக் கடன வாங்கி
மலைக்குப்   போயிட்டு வந்ததுல
ஒரே லாபம்
பத்துக்காசுக்குப் பொறாத என்ன
எல்லாரும்
சாமின்னு கூப்புட்டதுதான்

.............................................................................................

Thursday, 6 December 2012

பேருந்தில் வந்த  போது
குழந்தையின்
பலூன் வெடித்தது
யாரும் கண்டுகொள்ளவில்லை
கொஞ்சதூரம் போனதும்
பேருந்தின் டயர் வெடித்தது
குழந்தை
அதைக் கண்டுகொள்ளவில்லை